“என்கிட்ட 10 பைசா இருக்காது.. ஆனாலும் என்னை விட்டுப்போகல இவங்க”.. மனைவி, குடும்பம் பற்றி GP முத்து கலங்கவைத்த பேச்சு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் சென்றது.
Image Credit : vijay television
Also Read | Anikha Surendran : அடுத்தடுத்து கலக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ஒரே மாதத்தில் 2 படம் ரிலீஸ்..!
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
Image Credit : vijay television
மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
Image Credit : vijay television
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற ஜிபி முத்து, “மகனுக்காக தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினேன்” என குறிப்பிட்டார்.
Image Credit : vijay television
அதன் பிறகு, “அதிகமா பாசம் வீட்டார் மேல இருக்கு. ஆனா சில வெற்றிகளுக்காக சிலதை இழக்க வேண்டி இருக்கு. வீட்டுக்கே போக முடியல” என சொல்லி ஃபீல் பணும்போது, அவரது குடும்பத்தினர் அங்கு சர்ப்ரைஸாக வருகை தர, நெகிழ்ந்துபோன ஜிபி முத்து தன் மனைவி தன்னை மாமா என அழைத்தால் பிடிக்கும், ஆனால் அவர் அவ்வாறு அழைப்பதே இல்லை என சொன்னதும், அவரது மனைவி அவரை மாமா என அழைத்து நெகிழவைத்தார்.