‘மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்களால்’... 'ஜூனியர் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 21, 2019 11:14 PM

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை சீனியர்கள் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Medical College Students Forced To Shave Their Heads

உத்தரப்பிரதேசம் எடவாஹ் மாவட்டத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் ராகிங் நடைபெற்றுள்ளது. அங்கு படித்துகொண்டிருந்த சீனியர்கள் சேர்ந்து, முதலாமாண்டு மாணவர்கள் 150 பேரை மொட்டையடிக்கச் சொல்லி வற்புறுத்தி, தங்களுக்கு சல்யூட் வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்குமார் பேசுகையில், `ராகிங் போன்ற செயல்பாடுகளிலிருந்து மாணவர்களைக் காக்க நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். மேலும் ராகிங் செயல்பாடுகளுக்கு எதிரான கமிட்டி ஒன்றை அமைத்து புகார்களைப் பெற ஏற்பாடு செய்துள்ளோம். மாணவர்கள் ஆன்டி-ராகிங் கமிட்டியிலும் அவர்கள் விடுதி வார்டனிடமும் புகார் அளிக்கலாம். கண்டிப்பாக இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சில மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளோம். ஆகவே ஜூனியர் மாணவர்கள் எந்தவித கவலையும்படத் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : #SENIORS #JUNIORS #MEDICAL #STUDENTS