'என்னமோ உள்ள இருக்குங்க...' 'தோண்டி வெளிய எடுத்தப்போ...' சுத்தி இருந்த மக்கள் எல்லாரும் சேர்ந்து சொன்ன 'அந்த' வார்த்தை...! - வீடு கட்ட பேஸ்மென்ட் தோண்டியபோது நடந்த ஆச்சரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதி, கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். ஏலாக்குறிச்சியில் வாகனங்கள் கழுவும் வாட்டர் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். சரவணன் தன் நீண்ட நாள் கனவான வீடுகட்டும் வேலையை தொடங்கியுள்ளார்.
தனக்குச் சொந்தமான மூன்று சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த இரண்டு தினங்களாக அஸ்திவாரம் தோண்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (20-06-2021) அஸ்திவாரம் தோண்டிய இடத்தில் ஏதோ தட்டுபட்டுள்ளது. இதன்பின் கற்சிலை போன்று தென்பட்ட பொருளை அப்பகுதி மக்கள் எடுக்க முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் இருட்டு சூழ்ந்ததால் முயற்சி கைவிடப்பட்டது. இன்று (21-06-2021) காலை சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு வருவாய்த் துறையினர் முன்னிலையில் வெளியே எடுத்தனர்.
மண்ணில் இருந்த சிலையை சுத்தம் செய்து பார்த்தபின் தான் தெரிந்தது அது எட்டு அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை. இதனை கண்ட அப்பகுதி மக்களுக்கு ஒரே ஆச்சரியம்
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் 'கோவிந்தா கோவிந்தா' எனக் கூறி மாலையிட்டு தீபாராதனை காட்டினர்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெருமாள் சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் ஆராய்ச்சிக்குப் பின்னரே சிலை எந்தக் காலத்தை ஒட்டியது என்பது குறித்த தகவல் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.