'அவர வேற எங்கையாச்சும் தங்க சொல்லுங்க...' இங்க தங்கினார்னா எங்களுக்கு 'இந்த' பிரச்சனைகள்லாம் இருக்கும்...! - எதிர்ப்பு தெரிவிக்கும் ஏரியா வாசிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் அமெரிக்கா அதிபரான ட்ரம்ப் தற்போது குடியேறி இருக்கும் பங்காளவில் 3 வாரங்களுக்கு மேல் தங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முடியாது என அடம்பிடித்த சம்பவமும், நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபடுவது என அனைத்துவகையான குளறுபடிகளையும் ஏற்படுத்தினர். இதையெல்லாம் கடந்து 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஓய்வெடுப்பதற்காக தனது 160 மில்லியன் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் குடியேறியுள்ளார்.
இந்த பங்களாவானது, 20 ஏக்கர் பரப்பளவில் அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளை பால்கனியில் இருந்து கண்டு ரசிக்கும் வகையில் புளோரிடா கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. இதை ட்ரம்ப் 1985-ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி, இதனை ஒரு தனியார் கிளப்பாக மாற்றினார். இந்த 20 ஏக்கர் பரப்பளவில் 128 அறைகள் கொண்ட விடுதி, 22,000 சதுர அடி பரப்பளவிலான மிகப்பெரிய நடன அரங்கம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் நீச்சல்குளம் போன்ற ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ள இந்த பங்களாதான் புளோரிடாவில் இரண்டாவது மிகப்பெரிய பங்களா ஆகும்.
தற்போது இங்கு தங்கியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஓய்வுக்காகவும், அதன் பின் தனது அரசியல் பயணத்திற்காகத் திட்டமிடும் வகையிலும் ட்ரம்ப் இந்த பங்களாவிற்குக் குடிபெயர்ந்திருந்தாலும், ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது தனியுரிமைகள் ட்ரம்ப் வருகையால் பாதிக்கப்படக்கூடும் எனக்கூறி அவரது குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
மேலும் ட்ரம்ப் குடியேறியிருப்பது கிளப் பகுதி என்பதால், 1993 ஆம் ஆண்டு பாம் பீச் ஸ்டேட்ஸ் கிளப்புடனான அரசு ஒப்பந்தத்தின்படி, இப்பகுதியில் உள்ள கிளப்களில், ஒருவர் வருடத்திற்கு 21 நாட்களுக்கு மேல் தங்கமுடியாது. அதேபோல, தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறை.
இதன்காரணமாக, இந்த கிளப்பை ட்ரம்ப், அவரது நிரந்தர வீடாக மாற்றினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அப்பகுதியினர் தெரிவித்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.