'இப்போ இதையுமா கடத்துறாங்க!'.. கடலில் மிதந்துவந்த மூட்டை... திறந்து பார்த்ததும் உறைந்து நின்ற கடலோரக் காவல் படை !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 20, 2020 08:24 PM

தங்கச்சிமடம் கடல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மூட்டை ஒன்று மிதப்பதாக இந்தியக் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, சோதனை செய்ததில், 10,000 டோஸ் ஊசி மருந்தை மண்டபம் கடலோரக் காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

anti depressant bottles floating in the sea coast guard seizes

கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட விரலி மஞ்சளும் இப்படி கடத்தப்பட்டுவருகிறது. ஈரோடு பகுதிகளிலிருந்து மொத்தமாக மஞ்சளைக் கொள்முதல் செய்யும் தமிழகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவற்றை தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டக் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தெரிகிறது.

இந்தநிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக மண்டபத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் வர, அதனை சோதனை செய்த போது அந்த மூட்டைக்குள் 2 மி.லி அளவுகொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் B1, B6, B12 + Calcium Pantothenate என்ற ஊசி மருந்து கொண்ட சுமார் 10,000 குப்பிகள் இருந்துள்ளன. பின்னர் அவை கடலோரக் காவல் படை நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

மனித உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த மருந்துகள், இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கடலோரக் காவல் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நிலையில்,  அவர்கள் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anti depressant bottles floating in the sea coast guard seizes | Tamil Nadu News.