'உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...' தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்புள்ளதா...? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலில் பாதிப்பு மெல்ல மெல்ல மறைந்து வரும் சூழலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் 2-ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றே மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதமாக இன்று (30-11-2020) உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தென் தமிழகம், கேரளா வழியே அரபிக் கடல் நோக்கிச் செல்லும் என கூறப்படுகிறது. புயலுக்கு புரெவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தை தாக்குவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றே கூறப்படுகிறது.