‘லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நிகரான அன்டிலியா!’ ... ‘3 ஹெலிபேட்’.. 8 ரிக்டர் பூகம்பத்தை தாங்கும் வசதி.. அம்பானி வெளியிட்ட ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 30, 2020 11:19 AM

உலக பணக்காரர்கள் பட்டியலில் உள்ளவர் முகேஷ் அம்பானி.  இவரது மிகவும் விலை மதிப்பு மிக்க தனியார் சொத்துகளில் ஒன்று அன்டிலியா பங்களா. ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த பங்களாவில் இருந்தபடி மனைவி நீட்டா மற்றும் 3 குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதில் இஷா திருமணமாகி அவர் கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசிக்கிறார்.

Mukesh Ambani Antilia richest mans opulent Rs 15,000 cr Mumbai

27 தளங்களைக் கொண்ட அன்டிலியா பங்களா, இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியானது. அட்லான்டிக் பெருங்கடல் அருகில் அமைந்துள்ள அன்டிலியா தீவின் பெயரே இந்த வீட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில்128 கார்களை நிறுத்தும் வசதி , 9 விரைவு லிப்ட்கள் உள்ளன. மேல்தளத்தில் 3 ஹெலிபேட் (ஹெலிகாப்டர் இறங்குதளம், தவிர 50 பேர் பார்க்கும் அளவான திரையரங்கம், மேற்கூரையில் 3 தொங்கும் தோட்டம், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோயில், பனி அறை மற்றும் 24 மணி நேரமும் பணியாற்றும் வசதி கொண்ட 600 பணியாளர்கள் தங்க இட வசதி உள்ளிட்டவை இந்த பங்களாவில் உள்ளன.

சூரியன் மற்றும் தாமரை வடிவிலான இந்த பங்களா 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பத்தை தாங்கும். 2006-ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த பங்களாவில் 2012-ல் அம்பானி குடும்பம் குடியேறியது. எனினும் அனாதை குழந்தைகள் நலனுக்காக வக்பு வாரியத்துக்கு சொந்தமான இந்த இடத்தை விற்று அதில் கிடைத்த தொகை மூலம் ஏழைக் குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு பின்னர், வக்பு அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் வருவாய்த்துறை எதிர்ப்பு தெரிவித்ததால்,  பல சட்ட சிக்கலுக்கு இடையே அம்பானி ரூ.1.6 கோடிதொகையை செலுத்தி தடையில்லா சான்று பெற்றார். இதில் 3 ஹெலிபேட் அமைக்க கடற்படையும், சுற்றுச் சூழல் அமைச்சகமும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன.

Mukesh Ambani Antilia richest mans opulent Rs 15,000 cr Mumbai

2011-ம் ஆண்டு இந்த பங்களாவை அதிர்ஷ்டமில்லாத பங்களா என குறிப்பிட்ட வாஷிங்டன் போஸ்ட், அதனால் முகேஷ் அம்பானி இதில் குடியேறவில்லை என தெரிவித்தது. ஆனால் 2012-ம் ஆண்டில் இந்த பங்களாவுக்கு அவர் குடிபெயர்ந்த பின்னர் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 4-ஆம் இடத்துக்கு உயர்ந்தார். தற்போது ஆசிய பணக்காரர்கள் வரிசையில் அம்பானி முதலிடத்தில் நிலைத்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mukesh Ambani Antilia richest mans opulent Rs 15,000 cr Mumbai | India News.