மொத்தமாக மூடப்பட்ட 'ஹோல்சேல்' கடைகள்... 'இந்த' அத்தியாவசிய பொருட்களின் விலை 'கிடுகிடுவென' உயரலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 20, 2020 07:17 PM

சென்னையின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றான கொத்தவால்சாவடி ஒரு வாரம் மூடப்படுகிறது.

All Shops in Kothavalchavadi Market will be closed till 24th

கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் சமீபத்தில் இடம் மாற்றப்பட்டது. கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக விளங்குவதால் காய்கறி மார்க்கெட்டுகள் ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மிகப்பெரிய மளிகை பொருட்கள் மார்கெட்டாக திகழும் கொத்தவால்சாவடி மார்க்கெட் 1 வாரம் மூடப்படுகிறது. வடசென்னையில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு போல கொத்தவால்சாவடி மார்கெட்டும் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்க்கெட் மூடப்பட்டு இருக்கிறது.

அதன்படி சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த விற்பனை கடைகள் நேற்று மூடப்பட்டன. அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான மளிகை பொருட்கள், நொறுக்குத்தீனிகள், அப்பள வகைகள், எண்ணெய் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டன. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் கொத்தவால்சாவடி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. கொத்தவால்சாவடி சந்தை மூடப்பட்டு உள்ளதால் மளிகை பொருட்கள் விலை வரும் நாட்களில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதுடன், இருப்பில் உள்ள மளிகை பொருட்களும் சில்லரை விற்பனையால் விலை உயர வாய்ப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.