'வெள்ளியில் மாஸ்க்...' 'கல்யாண ஜோடின்னா கூட்டத்துல தனியா தெரியணும்ல...' இந்த மாஸ்க்கோட விலை என்ன தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 20, 2020 02:38 PM

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் வீட்டிலிருந்து பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணியுமாறு வலியுறுத்தியுள்ளது மத்திய மாநில அரசுகள். இந்நிலையில் திருமணமாகும் தம்பதிகளை கருத்தில் கொண்டு முன்னோக்கு பார்வையுடன் வெள்ளியில் மாஸ்க் செய்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ஒரு நகைக் கடை வியாபாரி.

silver mask for bride and groom made by jewelry owner

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும், பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற பிரத்யேக காரியங்களுக்கு மட்டுமே மக்கள் கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அதுவும் குறிப்பிட்ட 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கேற்கும் அனைவரும் மாஸ்க் அணியவும், கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவும் வலியுறுத்தப்படுகிறது.

திருமணங்களில் முக்கியமானவர்கள் மணமகனும், மணமகளும் தான். திருமணம் காண வருபவர்களைப்போல அவர்களும் துணி மாஸ்க் அணியலாமா?. அதற்காக தான் திருமண தம்பதிகளுக்கு என பிரத்யேகமாக வெள்ளியில் மாஸ்க் வடிவமைத்துள்ளார் கர்நாடகாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர்.

கர்நாடகாவின் கொல்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தயாரித்த இந்த வெள்ளி மாஸ்க் சுமார் 2500 ரூ முதல் 3500 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.