VIDEO : "சாதாரணமா அவரு ஒரு முடிவு எடுக்கமாட்டாரு, அப்டி எடுத்தா..." - 'ரஜினியின்' முடிவு குறித்து 'அதிரடி' கருத்து தெரிவித்த 'பாரதிராஜா'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Dec 29, 2020 10:10 PM

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்திருந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

BharathiRaja speaks about rajinikanth quit politics

கட்சி ஆரம்பிப்பதற்கு அனைத்து விதமான பணிகளும் ரஜினி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திடீரென ரஜினியின் இந்த அறிவிப்பு பரபரப்பை கிளப்பியது. இருந்த போதும், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதால் கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் நடிகர் ரஜினிகாந்த் முடிவு குறித்து Behindwoods சேனலிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசிய பாரதிராஜா, 'எனது நண்பர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிவித்த போது எனக்கு அதில் பெரிதாக உடன்பாடில்லை. ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் ரஜினிக்கு இதை விட என்ன வேண்டும் என எனக்குத் தோன்றியது. சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்த போது நான் மிகவும் வேதனையடைந்தேன்.

அப்போது நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். 'எட்டா உயரத்தில் இருக்கும் உனக்கு இனியும் அரசியல் தேவையா?' என நான் கேட்டேன். மனவேதனை இல்லாமல் இனியுள்ள காலங்களில் நிம்மதியாக வாழ்வது மட்டுமே ஒரு குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தேன். அவர் என்ன முடிவு எடுப்பார் என நான் எதிர்பார்த்து காத்திருந்த  போது மிகச் சிறந்த முடிவை அவர் தற்போது எடுத்துள்ளார்.

ரஜினியின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் அதிகம் வேதனைப்பட்டு கொதித்து எழுவார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரஜினி எடுக்கும் முடிவையே தங்களின் முடிவாக கருதி உடன் பயணித்துள்ளனர். அதற்கே ஒரு நான் தலை வணங்குகிறேன்' என ரஜினியின் முடிவை பாராட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் பாரதிராஜா பேசியுள்ளார்.

முழு வீடியோவைக் காண லிங்க் க்ளிக் செய்க: 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BharathiRaja speaks about rajinikanth quit politics | Tamil Nadu News.