“ஸ்டூடன்ஸை பலி ஆடா ஆக்குறாங்க..” - கலாஷேத்ரா விவகாரத்தில் பிக்பாஸ் அபிராமி சொன்னது என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் பரபரப்பாகி வருகின்றன.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதன் பேரில் சில பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், “பொதுவாகவே எந்த ஒரு கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமல் குரல் கொடுப்பவள் நான். நான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் பேசுவேன். அதேசமயம் நான் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவி.
ஒரு பிரச்சனையை ஒரு பக்கம் மட்டுமே இருந்து பார்க்க கூடாது. நான் படித்த வரை எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லையும் ஏற்பட்டதில்லை. அதே சமயம் இந்த மாணவிகளை அழுத்தம் தந்து இப்படி பேச சொல்வதாக எண்ணுகிறேன். இதே போல் இவர்களை இப்படி பேச சொல்லும் ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அறிகிறேன்” என்று குறிப்பிட்ட அவர்களின் பெயரை தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார் நடிகை அபிராமி.
மேலும் பேசியவர், “10 வருடமாக இந்த பிரச்சினை நடக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அதே 10 வருடத்துக்கு முன்பு இங்கு படித்தவள்தான் என்கிற முறையில் இதை பேசுவது என்னுடைய பொறுப்பு, கலாஷேத்ராவுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் எனும்பொழுது நான் குரல் எழுப்புகிறேன், மாணவர்களுடன் நேராக நான் பேச விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.