இந்து, கிறிஸ்டியன் என ஒரே நேரத்துல தமிழ்நாட்டில் நடந்த 800 பேரின் திருமணம்.. அமர்க்களப்படுத்திய இஸ்லாமிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 01, 2023 10:13 AM

800 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்திவைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது சன்னி யுவஜன சங்கம். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

800 young men and women tie the knot at mass wedding in Padanthorai

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மனைவிகிட்ட போக கூடாது, 3 வருஷம் பேசவே கூடாது".. வீடியோவால் சிக்கிய கணவன்.. கோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு!!

கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள கூடலூர் கிராமத்தில் தான் இந்த வைபவம் நடைபெற்றிருக்கிறது. இதில் மொத்தமாக 800 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 74 மணமக்களும் அடக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடலூர் அருகே உள்ள படந்தோரையில் உள்ள படந்தர மர்கஸ் வளாகத்தில் இந்த திருமணம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றிருக்கிறது.

இந்த விழாவில் காந்தாபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார், இ.சுலைமான் முஸ்லியார், பொன்மலா அப்துல் காதர் முஸ்லியார் உள்ளிட்ட கேரள முஸ்லிம் ஜமாத்தின் முக்கியத் தலைவர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முஸ்லீம் தம்பதிகளின் திருமணத்தை மத குருமார்கள் தலைமை தாங்க, பிற சமூகத்தைச் சேர்ந்த 74 மணமக்களின் திருமண சடங்குகள் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் தேவாலயத்தில் நடந்தது. மதச் சடங்குகளுக்குப் பிறகு, இந்து மற்றும் கிறிஸ்தவ தம்பதிகள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் பாதந்தரா மர்கஸ்-ல் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டனர்.

800 young men and women tie the knot at mass wedding in Padanthorai

Images are subject to © copyright to their respective owners.

இந்த பிரம்மாண்ட திருமணம் பற்றி பேசிய கேரள முஸ்லிம் ஜமாத்தின் மாவட்டச் செயலாளர் ஜமால் கருளை, "இதுபோன்ற அற்புதமான தருணத்தைப் பார்த்து என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இந்த நிகழ்வைக் கண்ட ஆயிரக்கணக்கான மக்களைப் போலவே, மன நிறைவு மற்றும் மத நல்லிணக்கத்தின் உணர்வுகள் என்னையும் மூழ்கடித்தன" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

800 young men and women tie the knot at mass wedding in Padanthorai

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே இந்த 5 வது முறையாக பிரம்மாண்ட திருமண விழாவை ஏற்பாடு செய்த தேவர்சோலை அப்துஸ்ஸலாம் முஸ்லியார் இதனை நடத்த பல்வேறு நல்மனம் கொண்டவர்கள் உதவியதாகவும் இது பெருமகிழ்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆடைகள் மற்றும் இதர தனிப்பட்ட செலவுகள் தவிர, ஒவ்வொரு ஜோடிக்கும் ஐந்து சவரன் தங்கம் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்பகுதி முழுவதிலும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணாங்க.. டாக்டர் அவங்க".. நடிகர் 'செங்கல் சைக்கோ' ராம் குமாரின் அறியாத பக்கங்கள்! EXCLUSIVE

Tags : #YOUNG MEN #WOMEN #MASS WEDDING #PADANTHORAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 800 young men and women tie the knot at mass wedding in Padanthorai | Tamil Nadu News.