என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணாங்க.. டாக்டர் அவங்க".. நடிகர் 'செங்கல் சைக்கோ' ராம் குமாரின் அறியாத பக்கங்கள்! EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் குமார்.

அந்த படத்தில் செங்கல் சைக்கோ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செங்கல் சைக்கோ சம்பந்தப்பட்ட மீம்கள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், நடன கலைஞராக சினிமாவில் வேலை பார்த்து வந்துள்ளார். பேராண்மை, பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, மற்றும் சில படங்களில் ராம் குமார் நடித்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் ராம் குமார் அளித்துள்ளார். அதில் அவருடைய சினிமா வாழ்க்கை & நிஜ வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். குறிப்பாக, "செங்கல் சைக்கோ ராம் குமார் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?" என்ற கேள்விக்கு "லைஃப்ல இன்னும் செட்டில் ஆகல. என் வீட்டில் எல்லாரும் செட்டில் ஆனவங்க. எல்லாரும் ஃபேமிலி மேன் ஆகிட்டாங்க. சினிமாவில் ஜெயிக்கனும், ஜெயிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்.
என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணாங்க, டாக்டர் அவங்க. ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் மருத்துவராக பணிபுரிந்தாங்க, எல்லாரும் பொறாமை பட்டாங்க.
இந்த விஷயம் வீட்டுக்கு கூட தெரியாது. அவங்களுக்கு விஷால்னா ரொம்ப பிடிக்கும், விஷால் படம் பாக்கனும்னா இரண்டு பேரும் சேர்ந்து தான் போய் பார்ப்போம். அழகான ஒரு தேவதை கூட ஒரு குரங்கு போயிட்டு இருக்கேனு ரோட்ல இருக்குற எல்லாரும் எங்களை தான் பார்ப்பாங்க. இதெல்லாம் அவங்க கண்டுக்க மாட்டாங்க. மூனு வருடம் லவ் பண்ணோம். எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க. அப்பறம் சினிமாவில் ஜெயிக்கனும்ங்கிறதால நானே காதல் வேண்டாம்னு சொல்லிட்டேன்." என செங்கல் சைக்கோ ராம் குமார் பதில் அளித்துள்ளார்.
