"இதுக்கு 'EXTRA' காசா??.." ஹோட்டலை சின்னாபின்னம் ஆக்கிய இளம் பெண்கள்.. நிலைகுலைந்த ஊழியர்கள்..
முகப்பு > செய்திகள் > உலகம்உணவகம் ஒன்றில், மூன்று பெண்கள் சேர்ந்து திடீரென தாக்க ஆரம்பிக்கும் வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன், மூன்று பெண்கள் உணவருந்த வந்துள்ளனர்.
அப்போது, ஃப்ரைஸுக்காக அந்த மூன்று பெண்களும், கூடுதல் சாஸ் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சுமார் 1.75 டாலர் அதிக கட்டணம் ஆகும் என்றும் உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவேசமான இளம்பெண்கள்
இதனைக் கேட்டதும் அந்த மூன்று பெண்களும் கோபம் அடைந்துள்ளனர். அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஆவேசம் அடைந்த அந்த பெண்கள், தங்கள் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த ஊழியர்களையும் தாக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த ஸ்டூல், க்ளாஸ் பாட்டில்கள் என கைக்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே பறந்து சென்றது. இதனைக் கண்ட கடை ஊழியர்களும் ஒரு நிமிடம் பயத்தில் பதற்றத்துடன் நிற்க, அந்த பெண்கள் கவுண்டரில் மீது ஏறி, அதிக அட்டகாசமும் செய்கின்றனர். இது போக, ஒரு பெண் அங்கே ஏறி நின்று நடனமாடவும் செய்கிறார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்ற இரண்டு பெண்கள் கடை முழுவதையும் சின்னா பின்னமாக்கி, ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கினர். அங்கிருந்த கணினி உள்ளிட்ட பல பொருட்களும் உடைந்து போயுள்ளது.
நிலைகுலைந்து போன ஊழியர்கள்
இது போக, பெண்களின் தாக்குதல் காரணமாக, அந்த உணவகத்தின் ஊழியரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் இதனைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். தொடர்ந்து, கடையை தாக்கி சேதமடைய செய்த மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த உணவகத்தின் இணை உரிமையாளர் தெரிவித்ததன் படி, அந்த மூன்று பெண்கள் தாக்குதல் நடத்திய போது, அங்கே இருந்த அனைத்து ஊழியர்களும் அதிகம் அதிர்ச்சியில் உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும், பயத்தில் நிலை குலைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, தாக்குதலை நேரில் கண்ட பெண் ஊழியர் ஒருவர், தனது வீட்டை விட்டு கூட வெளியே வர விரும்பவில்லை என்றும், அவருக்கு ஒரு மகன் உள்ளதால், வாழ்க்கையை நினைந்து பயப்படுவதாகவும் அந்த இணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
