எவ்ளோ 'பெரிய' வண்டி.. ஸிவா செஞ்ச 'குட்டி' உதவி.. நெகிழ்ந்துபோன 'கூல்' கேப்டன்.. வைரல் 'வீடியோ'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 24, 2019 08:12 PM

இந்திய அணியின் கூல் கேப்டன் தோனி தற்போது நீண்ட ஓய்வில் இருக்கிறார். அடுத்தடுத்து அறிவிக்கப்படும் டெஸ்ட் தொடர்களில் தோனி பெயர் இடம் பெறாததால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். எனினும் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறு சிறு வீடியோக்களை தோனி வெளியிட்டு வருகிறார்.

 

Ziva helps MS Dhoni clean up his car , Watch Video
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A little help always goes a long way specially when u realise it’s a big vehicle

A post shared by M S Dhoni (@mahi7781) on

அந்த வகையில் தோனி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் வாகனத்தை கழுவி துடைக்கும் தோனிக்கு உதவியாக ஸிவாவும் உதவி செய்கிறார். இதுகுறித்து தோனி,''ஒரு சிறு உதவி நீண்ட தூரத்துக்கு உதவும். குறிப்பாக இது மிகப்பெரிய வாகனம் என்பதை உணரும் போது,'' என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகிறது.