அட, நம்ம ஆளு 'ஃபோட்டோ'ப்பா...! 'இந்திய கிரிக்கெட் வீரரின் புகைப்படத்தை பகிர்ந்த ஜான் சீனா...' அதுவும் யாரு படத்த...?! - கொண்டாடும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Nov 15, 2021 03:46 PM

பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனியிடன் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

wwe John Cena shared a photo with MS Dhoni on his Instagram

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா சமூகவலைத்தளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தையோ அல்லது பிரபலங்களில் புகைப்படத்தை பதிவேற்றுவார். ஆனால் அதில் எந்த கேப்ஷனும் இருக்காது.

wwe John Cena shared a photo with MS Dhoni on his Instagram

அதேபோல், சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த சித்தார்த் சூக்லா போட்டோவை கூட ஜான் சீனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.

இந்நிலையில்,  இரு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி யாருடனோ கைகுலுக்க செல்வது போன்ற புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

wwe John Cena shared a photo with MS Dhoni on his Instagram

மல்யுத்த வீரர் ஜான் சீனா பதிவிட்ட சில  நிமிடங்களிலேயே இந்த படம் இணையத்தில் உடனடியாக வைரலானது. எப்போதும் போல ஜான் சீனா அது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் இணையவாசிகள் வழக்கம் போல தங்களுக்கு தகுந்தார் போல வைத்து செய்து வருகின்றனர்.

அதோடு, ஜான் சீனாவின் பிரபல வசனமான 'You Can't See Me' என்ற வசனத்தை வைத்து கலாய்து வருகின்றனர். ஜான் சீனா சிறிய இடைவேளைக்கு பிறகு மனி இன் பேங்க் 2021 போட்டிக்காக WWE-க்கு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Cena (@johncena)

Tags : #WWE #JOHN CENA #MS DHONI #PHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wwe John Cena shared a photo with MS Dhoni on his Instagram | Sports News.