'ஒண்டிக்கு ஒண்டி வாங்க!.. மோதி பாத்திருவோம்'!.. நடிகர் அக்ஷய் குமாரை... சண்டைக்கு அழைத்த 'THE UNDERTAKER'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பிரபல WWE வீரர் அண்டர்டேகர் சமூக வலைதளம் மூலம் சண்டைக்கு அழைத்த பதிவு வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அக்ஷய் குமார் உள்ளார். உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில், 366 கோடி ரூபாய் வருவாயுடன் அக்ஷய் குமார் 6வது இடத்தை பிடித்திருந்தார். இந்த அளவு உலகம் முழுவதும் அறியப்படும் அக்ஷய் குமார், 2.0 தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதற்கிடையே, அக்ஷய் குமார் நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லாடியோன் கா கில்லாடி'. இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், பிரபல WWE வீரரான அண்டர்டேகர் உடன் மோதி வெற்றிபெறுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அக்ஷய் குமாரும், அண்டர்டேகர் வேடத்தில் இருந்த நடிகரை அடித்து வீழ்த்துவார். ரசிகர்களிடம் இந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக அக்ஷய்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீம் ஒன்றை பகிருந்திருந்தார். அதில், அண்டர்டேகரை தோற்கடித்தவர்கள் என பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் படத்துடன் அக்ஷய் குமார் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இந்த மீம் வைரலானதை அடுத்து, அதில் அண்டர்டேகர் பதிலளித்திருந்தார். உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என அக்ஷய் குமாருக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அக்ஷய் குமார், எனது காப்பீட்டை ஆய்வு செய்துவிட்டு கூறுகிறேன் சகோதரரே என நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த பதிவுகளை இருவரது ரசிகர்களுமே பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
