"'மேட்ச்' நடுவுல, இந்த பிளேயர் கிட்ட தான் 'தோனி' நெறய 'ஐடியா' கேப்பாரு.. 'கெய்க்வாட்' பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மட்டும் தான், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், 7 ஆவது இடம் பிடித்து வெளியேறியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில், இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், சென்னை அணியின் இந்த வெற்றிப் பாதைக்கு, அந்த அணியின் கேப்டன் எம். எஸ். தோனி (MS Dhoni) மிக முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், அனுபவம் வாய்ந்த பல சீனியர் வீரர்கள், சென்னை அணிக்காக ஆடியுள்ளதும் அவர்களின் மிகப்பெரிய பலம். அதிலும் குறிப்பாக, தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெஸ்ஸிஸ் (Faf Du Plessis),சென்னை அணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சீசன் முதல் சென்னை அணிக்காக ஆடி வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், (Ruturaj Gaikwad), தோனி - டுபிளெஸ்ஸிஸ் இடையேயான நட்பு பற்றி, சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
'தோனி - டுபிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மீது மிகவும் மதிப்புடன் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களிடையே இருக்கும் பிணைப்பு தான். ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும், இருவரும் போட்டியைப் பற்றி அதிக நேரம் கலந்துரையாடுவார்கள். டுபிளெஸ்ஸிஸ் கூட சில விஷயங்களை தோனியிடம் பரிந்துரைப்பார்.
அவர்கள் விவாதிப்பது என்றால், 5 முதல் 10 நிமிடங்கள் பேசுவதல்ல. சில சமயம், அவர்களின் கலந்துரையாடல், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை செல்லும். அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்திலும், மாறி மாறி அதிகம் உரையாடிக் கொள்வார்கள். அது மட்டுமில்லாமல், பல முறை தோனி கூட, போட்டிக்கு நடுவே, டு பிளெஸ்ஸிஸை அணுகி, அவரது ஆலோசனைகளைக் கேட்டு அதனையும் செயல்படுத்தியுள்ளார்' என கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
