சென்னையின் 'பிரபல' மருத்துவமனைக்கு 'பிராண்ட் அம்பாசடர்' ஆன 'தல' தோனி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 19, 2021 10:02 PM

காவேரி மருத்துவமனை குழுமத்தின் விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

MS Dhoni appointed as the brand ambassador kauvery Hospital

இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவேரி மருத்துவமனையைப் போன்று தோனியும் சிறிய நகரத்தில் இருந்து வந்து பெரிய உச்சத்தைத் தொட்டவர், திருச்சியில் வெறும் 30 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவமனையாக ஆரம்பித்தோம். ஆனால், தற்போது எங்கள் மருத்துவமனையில் 1,500 படுக்கைகள் உள்ளது. தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் கிளைகள் கொண்ட மருத்துவமனை குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளோம்.

MS Dhoni appointed as the brand ambassador kauvery Hospital

எல்லா தரப்பு மக்களுக்கும் அவர்களால் செலுத்தக்கூடிய அளவிலான கட்டணங்களுடன் தரமான உயர்ந்த மருத்துவமே எங்கள் குறிக்கோள்” என்று காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், "மகேந்திரசிங் தோனி அவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவச் சேவை செய்து வரும் ஒரு நிறுவனத்துடன் விளம்பர தூதராக இணைவதில் பெருமையடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

தோனி தற்போது அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறார். ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் யுஏஇ-யில் நடைபெற உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni appointed as the brand ambassador kauvery Hospital | Tamil Nadu News.