பவுலிங் படையில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்திய அணியின் ப்ளேயிங் 11 அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. சவுத்தாம்ப்டன் ஏ.ஜி.எஸ் பவுலில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் விளையாட உள்ள 11 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய அணியின் ப்ளேயிங் 11:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி எந்த வித சமரசமும் இல்லாமல் தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ப்ளேயிங் 11ல் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
