இந்த தடவையும் 'அந்த' நாட்டிற்கு தான் அதிர்ஷ்டம்...! 'இது அவங்களுக்கு செகன்ட் டைம்...' - இத வச்சு என்ன பண்ண போறாங்க தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1095 ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முதலில் உலகிலேயே மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த வைரம் சுமார் 3,106 காரட் அளவு கொண்டதாகும்.
அதன்பின், இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் 2015-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.
அதனை தொடர்ந்து தற்போது உலகளவில் மூன்றாவது பெரிய வைரமும் போஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 1,098 காரட் என கூறப்படுகிறது.
கடந்த 1-ம் தேதி அரசு துறையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால், 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் உடைய உலகின் மூன்றாவது பெரிய வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதைய கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.