கிரிக்கெட் பிதாமகன் சச்சினுக்கு புதிய கவுரவம்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 01, 2023 10:54 AM

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு புதிய கவுரவத்தை அளிக்க இருக்கிறது மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம். இது அவருடைய ரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Sachin Tendulkar life size statue to be installed at Wankhede Stadium

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணாங்க.. டாக்டர் அவங்க".. நடிகர் 'செங்கல் சைக்கோ' ராம் குமாரின் அறியாத பக்கங்கள்! EXCLUSIVE

உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய பெயர் சச்சின் டெண்டுல்கர். அதிக ஒருநாள் போட்டிகள், அதிக சதங்கள் என சச்சின் வைத்திருக்கும் ரெக்கார்டுகளை முறியடிக்க இன்றும் பல முன்னணி வீரர்கள் திணறிவருகின்றனர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெண்டுல்கர் 53.78 சராசரியுடன் 15,291 டெஸ்ட் ரன்களையும், 44.83 சராசரியில் 18,426 ODI ரன்களையும் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் விளாசியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்த சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Images are subject to © copyright to their respective owners.

சச்சினின் கிரிக்கெட் வாழ்விற்கு அடித்தளம் அமைத்தது அவருடைய கோச் அச்சரேக்கர் என்றால், அது நிகழ்ந்த இடம் வான்கடே மைதானம். சொல்லப்போனால் சச்சினின் வாழ்க்கையில் மறக்க முடியாத பல சரித்திர சம்பவங்களை தாங்கி நிற்கிறது இந்த மைதானம். இங்கு தான் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. தன்னுடைய கடைசி டெஸ்ட் மேட்சை இதே மைதானத்தில் விளையாடினார். 2013 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த அந்தப் போட்டிக்கு பிறகு சச்சின் பேசிய வரிகள் அவருடைய பலகோடி ரசிகர்களை கண்கலங்க செய்தது.

Images are subject to © copyright to their respective owners.

இப்படி அவருடைய வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள வான்கடே மைதானத்தில் சச்சினின் ஆளுயர சிலை வைக்கப்பட உள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே அறிவித்திருக்கிறார். வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சின் தன்னுடைய 50-வது வயதில் அடியெடுத்து வைக்கும் தினத்தில் இந்த சிலை திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சச்சின்," வான்கடேவில் என்னுடைய வாழ்க்கை முழுமையடைந்ததாக உணர்கிறேன். இது சில சிறப்பு தருணங்களுக்கு சாட்சியாக இருந்தது. மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடேயில் எனது சிலையை நிறுவுவது குறித்து பரிந்துரைத்தபோது, ​​நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். மும்பை கிரிக்கெட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்கிறேன், MCA உடனான எனது அற்புதமான பந்தம் இன்றும் தொடர்கிறது. இந்த வகையான அன்புக்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also Read | இந்து, கிறிஸ்டியன் என ஒரே நேரத்துல தமிழ்நாட்டில் நடந்த 800 பேரின் திருமணம்.. அமர்க்களப்படுத்திய இஸ்லாமிய மக்கள்..!

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #WANKHEDE STADIUM #STATUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sachin Tendulkar life size statue to be installed at Wankhede Stadium | Sports News.