அட.. நம்ம ‘சந்திரமுகி 2’ கங்கனாவுக்கு பிடிச்ச படங்கள் இதுதான்.. லிஸ்ட் போட்டு சொல்லிட்டாங்க.
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகை கங்கனா ரனாவத் தனக்கு பிடித்த படங்களை பட்டியலிட்டிருக்கிறார். அவருடைய இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
கங்கனா ரனாவத்
இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர் கங்கனா ரனாவத். மேலும், சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Images are subject to © copyright to their respective owners.
'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் கங்கனா ரனாவத் பெற்றார். கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார்.
இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
சந்திரமுகி-2
மேலும் தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கங்கனா தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை பகிர்ந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
லிஸ்ட்
கங்கனா பகிர்ந்துள்ள இந்த பட்டியலில் மொத்தம் 8 படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, 1)அமேதியஸ் 2) தி ஷாஷங்க் ரிடெம்ப்ஷன் 3) அமெரிக்கன் பியூட்டி 4) பியாசா 5) அமோர் 6) செவன் இயர்ஸ் ஆஃப் இட்ச் 7) இன்டர்ஸ்டெல்லர் 8) நோட்புக் ஆகியவையாகும். இதில் பியாசா மட்டுமே இந்தி படமாகும். இதனை குரு தத் இயக்க வஹீதா ரஹ்மான், ஜானி வாக்கர் ஆகியோர் இந்த படத்தில் நடந்திருந்தனர். இந்நிலையில், நடிகை கங்கனா பகிர்ந்துள்ள இந்த பட்டியல் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
