‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 09, 2019 03:22 PM
அரையிறுதிப் போட்டியில் மோதும் இந்தியாவும், நியூஸிலாந்தும் அணியில் முக்கிய சில மாற்றங்களை செய்துள்ளன.

12 -வது உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து இன்று(09.07.2019) முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் நியூஸிலாந்து அணியில் இருந்து டிம் சவுத்தி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
