‘எனக்கு திருமணத்தைத் தாண்டிய 5-6 உறவுகள் இருந்தன..’ பிரபல கிரிக்கெட் வீரர் ஒப்புதல்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 18, 2019 08:41 PM

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் திருமணத்திற்குப் பிறகும் தனக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி  மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Abdul Razzaq reaveals he had 5, 6 affairs after marriage

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அப்துல் ரசாக், தனக்கு திருமணத்திற்குப் பிறகும் 5,6 பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் இதில் சில உறவுகள் ஒரு வருடம் வரை நீடித்தது, சில ஒன்றரை வருடம் நீடித்தது எனவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அதை உறுதி செய்துகொள்ள இந்த உறவுகள் திருமணத்திற்குப் பிறகானதா எனக் கேட்க, அதற்கு அவர் ஆமாம் என பதிலளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரசாக் கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரே இவர் இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #PAKISTAN #ABDULRAZAAQ