‘அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!’ தீபக் சஹாரின் ‘காதலி’ யார் தெரியுமா..? வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 08, 2021 11:51 AM

சிஎஸ்கே வீர்ர தீபக் சஹாரின் காதலி குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend?

துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் (Faf du Plessis) 76 ரன்கள் எடுத்தார்.

Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend?

இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) 98 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend?

இந்த நிலையில், இப்போட்டி முடிந்ததும் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் (Deepak Chahar) தனது தோழி ஜெயா பரத்வாஜ் (Jaya Bhardwaj) என்பவரிடம் மைதானத்தில் காதலை வெளிப்படுத்தினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும், அங்கேயே இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் தீபக் சஹாரின் காதலில் ஜெயா பரத்வாஜ் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஜெயா பரத்வாஜ், ஹிந்தி பிக்பாஸ் சீசன்-5 போட்டியாளரும், நடிகருமான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend?

தீபக் சஹாரும், ஜெயா பரத்வாஜும் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்துள்ளார். இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைக் காண, பிசிசிஐயின் அனுமதி பெற்று ஜெயா பரத்வாஜை தீபக் சஹார் அழைத்து வந்துள்ளார்.

முன்னதாக சிஎஸ்கே வீரர்களுக்கு ஜெயா பரத்வாஜை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனை அடுத்து ப்ளே ஆஃப் சுற்று முடிந்த பின்னரோ அல்லது இறுதிப்போட்டியின் போதோ தனது காதலை வெளிப்படுத்த தீபக் சஹார் நினைத்துள்ளார்.

Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend?

ஆனால் அவ்வளவு நாள் தாமதப்படுத்த வேண்டாம் என தீபக் சஹாருக்கு தோனி அறிவுரை வழங்கியதாக கூறப்படுறது. அதனால்தான் நேற்றைய சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டி முடிந்ததும் ஜெயா பரத்வாஜிடம் தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Who is Chennai Super Kings player Deepak Chahar’s girlfriend? | Sports News.