என்ன ‘தல’ இப்படி பண்ணிட்டீங்க..! தோனி பண்ண பெரிய தப்பு.. சரமாரியாக கிழிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே கேப்டன் தோனியை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் (IPL) தொடரின் 50-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸ் (10 ரன்கள்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (13 ரன்கள்) களமிறங்கினர். ஆனால் முந்தைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி ஆரம்பத்திலேயே அவுட்டாகி வெளியேறியது.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா (19 ரன்கள்) மற்றும் மொயின் அலி (5 ரன்கள்) கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை. இதனால் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணி இழந்தது. இந்த இக்கட்டான சமயத்தில் கேப்டன் தோனியும் (Dhoni), அம்பட்டி ராயுடுவும் (Ambati Rayudu) கூட்டணி சேர்ந்தனர்.
இதில் அம்பட்டி ராயுடு அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் இருந்த தோனி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்ட தோனி 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானர். குறிப்பாக ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அவர் அடிக்கவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியைப் பொறுத்தவரை அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பொதுவாக ரன்கள் குறைவாக அடித்துள்ளபோது ஜடேஜாவை (Jadeja) தான் மிடில் ஆர்டரில் தோனி களமிறக்குவார். அதற்கு காரணம், கடைசி கட்ட ஓவர்களில் ஜடேஜா அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளை விளாசுவார்.
பத்து பால் முன்னாடியே கிளம்பியிருக்கலாம்.#thala #Dhoni
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) October 4, 2021
எப்பவாச்சும்ன்னா பரவால்ல. எப்பவுமே இப்படித்தான்னா என்ன பண்ண 🤦🏻♀️🤦🏻♀️
— AnbuDen வித்ஸ் 💛💛 (@ividhyac) October 4, 2021
ஒரு காலத்துல 20 பால் க்கு 50 அடிக்கணும்னா கூட டோனி இருந்தா அடிப்பாருன்னு நம்பினோம்..
ஆனா இன்னைக்கு 50 பால் இருந்தா கூட 20 ரண் அடிப்பாறான்னு நம்பிக்கை இல்லாம பண்ணிட்டியே தலைவா 💔
அந்த பேட்ட சுழட்டு தலைவா 😏
We miss vintage #dhoni ❤ pic.twitter.com/mKkY7cXun8
— ஜால்ரா 2.0 🥏 (@Jaalraa_2PointO) October 4, 2021
தலைவன் #Dhoni அ அவுட் பண்ணா #Jadeja #Bravo இறங்கி அடிப்பாங்கனு தலைவன அவுட்டாக்காம வெச்சிருக்காங்க...#masterplan 👌👌👌#CSKvsDC
— 《 $ @ n + 😅 s H 》🎭 (@san_officl) October 4, 2021
T20ல டெஸ்ட் ஆட்டம்னா என்னன்னு நீ இன்னைக்கு பாப்ப 😎😎#CSKvsDC #CSK #IPL2O21 #ChennaiSuperKings #Dhoni pic.twitter.com/dAQDqpdLbW
— SELVA (@Ambedh_Selva) October 4, 2021
#Dhoni today
EXPECTATIONS vs REALITY#CSK #DelhiCapitals #CSKvsDC pic.twitter.com/ODOneqmPR7
— ♛ Cheeku (@kingKOHLI1807) October 4, 2021
ஆனால் ஜடேஜாவை களமிறக்காமல், தோனியே இந்த முறை களமிறங்கினார். ஆனால் பெரிய அளவில் அவர் ரன்களை எடுக்காதது தோனி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 10 பந்துகளுக்கு முன்னால் அவுட்டாகி இருந்தால் ஜடேஜா வந்து கூட ரன் அடித்திருப்பார் என தோனி ரசிகர்களே அவரை விமர்சனம் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
