VIDEO: அடேங்கப்பா..! வேறலெவல் கேட்ச்.. விராட் கோலியே பார்த்து வியந்துபோய்ட்டாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் டேனியல் கிறிஸ்டியன் பிடித்த கேட்ச் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஐபிஎல் (IPL) தொடரில் 52-வது லீக் போட்டி இன்று (06.10.2021) அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் (Jason Roy) மற்றும் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) களமிறங்கினர். இதில் ஜார்ஜ் கார்டன் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அபிஷேக் ஷர்மா (13 ரன்கள்) வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் ஹர்சல் படேல் வீசிய 12-வது ஓவரில் போல்டாகி கேன் வில்லியம்சன் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து வந்த ப்ரியம் கார்க் 15 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் மறுமுனையில் ஜேசன் ராய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இது பெங்களூரு அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அப்போது ஆட்டத்தின் 15-வது ஓவரை டேனியல் கிறிஸ்டியன் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜேசன் ராய், அதை ஸ்ட்ரைட் கவர் திசையில் பவுண்டரி அடிக்க முயன்றார். ஆனால் பந்து நேராக டேனியல் கிறிஸ்டியனின் கைக்கு சென்றது. உடனே கேட்ச் பிடிக்க முயன்ற அவரின் கையில் பந்து பட்டு பல தடவை பவுன்ஸ் ஆனது. ஆனால் பந்தை தவறவிடாமல் கேட்ச் பிடித்து டேனியல் கிறிஸ்டியன் அசத்தினார். இதைப் பார்த்த கேப்டன் விராட் கோலி வியந்துபோனார்.
#RCBvSRH pic.twitter.com/8lRcQK80rt
— Anime (@Anime12103730) October 6, 2021
what a catch😍#RCBvSRH #IPL2021 pic.twitter.com/yJZYCJKnyH
— Subuhi S (@sportsgeek090) October 6, 2021
இந்த நிலையில் 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்தது. இதனை அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளிறினர். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள ஹைதராபாத் அணி எடுத்தது. அதிபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்ஷர் படேல் 3 விக்கெட்டுகளும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளும், சஹால் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மற்ற செய்திகள்
