VIDEO: ‘தல’ நீங்களுமா..! ‘பாய்ஸ் ரவுண்டு கட்டுங்க’.. PROPOSE பண்ணது ஒரு குத்தமாய்யா.. வேறலெவல் ‘FUN’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோழியிடம் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹாருக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்களை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், இப்போட்டி முடிந்தபின் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் (Deepak Chahar), தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, அங்கேயே இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.
She said yesssss.! 💍
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
Showering lots of 💛 & 🎂 for the Cherry couple! 😍#SuperFam #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/t3a3bDIyzD
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
Here is the video of #CSK team celebrating #DeepakChahar's proposal pic.twitter.com/yrCctRu388
— Kollywood Talks (@kollywoodtalkz) October 7, 2021
இதனை அடுத்து வீரர்கள் அனைவரும் ஹோட்டல் திரும்பினர். அப்போது தீபக் சஹாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஹேக் தயார் செய்யப்பட்டிருந்தது. ஹேக்கை வெட்டியதும், கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் தீபக் சஹாரின் முகத்தில் ஹேக்கை பூசி கொண்டாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.