'திடீரென கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்'... 'ரஷீத் கானுக்கு தெரியும் அந்த வலி'... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சியை ரஷீத்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறுகிறது. இதனிடையே நேற்று முன் தினம் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் உம்ரன் மாலிக் களமிறங்கினார். அவருக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். இதனால் உம்ரன் மாலிக்கிற்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.
அந்த வகையில் உம்ரன் மாலிக்கின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் அவருக்குக் காண்பித்தது. இதனைப் பார்த்த உம்ரன் மாலிக் உடனடியாக உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார். இதை ரஷீத்கான் வீடியோவாக எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் உமர் மாலிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட ரஷீத்கானை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். ரஷீத்கானை விட அந்த வலியையும், சந்தோஷத்தையும் சொல்ல சரியான ஆள் வேறு யாரும் இல்லை என பதிவிட்டுள்ளார்கள்.
Surprising our young debutant with wishes from 🏠 just before our game yesterday ❤️#MondayMotivation #Debutant #YoungSpeedgun #UmranMalik pic.twitter.com/1mzoiW6kLm
— Rashid Khan (@rashidkhan_19) October 4, 2021

மற்ற செய்திகள்
