ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டி நேரம் மாற்றம்..! வெளியான புதிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 28, 2019 04:42 PM
ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான நேரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 58 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் இதுவரை 45 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதனை அடுத்து லீக் சுற்று முடிவடைந்து ப்ளே ஆஃப் சுற்று வரவுள்ளது. இதில் சனி, ஞாயிறு போன்ற தினங்களில் இரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் போட்டி முடிவடைய நள்ளிரவு வரை செல்வதால் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதனை தவிர்பதற்காக ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டி ஆட்டங்களை அரை மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு 7.30 மணிக்கே போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
