‘காட்டுத்தனமாக போட்டு விளாசிய ரசல்’..‘மிரண்டு போன கோலி’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 06, 2019 01:12 AM

ரசலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

WATCH: Russell blasted an unbeaten 48 as KKR chased down 206 to win

ஐபிஎல் டி20 லீக்கின் 17 -வது போட்டி இன்று(05.04.2019) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பார்தீவ் பட்டேல் களமிறங்கி அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் பார்தீவ் பட்டேல் 25 ரன்களில் வெளியேற அடுத்த ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கோலி கூட்டணி கொல்கத்தா பந்துவீச்சளகளை திணறடித்தது. 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. இதில் கோலி 84 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 206 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.கடைசி வரை பரபரப்பாக காணப்பட்ட போட்டியில் கொல்கத்தா அணியின் ரசல் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்ட்ரி உட்பட 48 ரன்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

Tags : #IPL #IPL2019 #RCBVKKR #KOLKATAKNIGHTRIDERS #ANDRERUSSELL #VIRATKOHLI