‘வெளிப்படையாவே சொல்றேன், இதுல வெட்கப்பட என்ன இருக்கு’.. தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 05, 2019 07:06 PM

தொடந்து 4 போட்டிகளில் தோற்றுவிட்டதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என சொல்லவிட முடியாது என்று பெங்களூரு அணி வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

IPL 2019: We don’t deserve to be in this position, Says Parthiv

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனில் இதுவரை விளையாட 4 போட்டிகளிலும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர் தோல்வியை மட்டுமே சந்திதுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 70 ரன்கள் மட்ட்மே எடுத்து தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் ஃபீல்டிங் மற்றும் பௌலிங் குறையாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று(05.04.2019) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டுமென பெங்களூரு அணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஆர்சிபி வீரர் பார்தீவ் பட்டேல்,‘வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான்கு போட்டிகளில் தொடந்து தோல்வியடைந்ததை சொல்வதற்கு வெட்கப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அது உண்மைதான். இதை நினைத்து நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்கப் போவதில்லை. ட்ரெஸிங் ரூமில் எங்களின் அணியின் சிறப்பைப் பற்றி எப்போதும் பேசிக்கொள்வோம். 0-4 என தோற்றதால் நாங்கள் தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

Tags : #IPL2019 #IPL #VIVOIPL #RCBVKKR #PLAYBOLD #ROYALCHALLENGERSBANGALORE