'அவர் நம்ம டீம் கேப்டன்'...'அத மறக்காதீங்க'...வைரலாகும் சிவாஜி பட மீம்ஸ் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 06, 2019 02:00 PM

நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்தது.

Don\'t troll kohli,he is our india team captain video goes viral

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மோதின.நடப்பு சீசனில் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூரு, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது.டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை எட்டிவிட்டதால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என  ராயல் சேலஞ்சர்ஸ் அணி எண்ணியது.ஆனால் அதனை பொய்யாகும் விதத்தில் கொல்கத்தா வீரர்களின் ஆட்டம் இருந்தது.குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ரசெல் பெங்களூரு பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். கண்ணில்பட்ட பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ரசெலின் காட்டடியில் (48) கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இது ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களுக்கு பேரிடியாக அமைந்தது.இதனால் மைதானத்திலேயே துக்கம் தாளாமல் ராயல் சேலஞ்சர்ஸ்  கேப்டன் கோலி அழுதார்.இதனை பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அது போன்று ட்ரோல் செய்பவர்களுக்கு பலரும் ''கோலி இந்திய அணியின் கேப்டன் என்பதனை மறந்து விட வேண்டாம் என பதிலளித்து வருகிறார்கள்.மேலும் எழுந்து வா சேம்பியனே என கோலிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.