‘முக்கிய 3 மாற்றங்களுடன் களமிறங்கும் சூப்பர் கிங்ஸ்’.. தோனியின் மாஸ்டர் ப்ளானை சமாளிக்குமா அஸ்வின் படை?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 06, 2019 04:00 PM
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்று முக்கிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 18 -வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(06.04.2019) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காயம் காரணமாக சென்னை அணியில் பிராவோ, லுங்கி நிகிடி போன்ற ‘டெத் ஓவர்’ பௌலர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக டு பிளசிஸ் , ஹர்பஜன் சிங், மற்றும் புதிதாக வந்த நியூஸிலாந்து வீரர் ஸ்காட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
