‘திடீரென விலகிய பிராவோ’..என்னாச்சு அவருக்கு?..ஷாக் கொடுத்த சிஎஸ்கே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 05, 2019 11:33 PM
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2 புள்ளிகளை இழந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.
மேலும் இப்போட்டியில் விளையாடிய சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவுக்கு பந்து வீசும் போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
இந்நிலையில் பிராவோ காயம் காரணமாக இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். இவருக்கு பதிலாக புதிதாக வந்த நியூஸிலாந்து வீரர் ஸ்காட் குஜ்லியான் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பிராவோ, லுங்கி நிகிடி போன்ற ‘டெத் ஓவர்’ பௌலர்கள் இல்லாதது சென்னை அணிக்கு இழப்பாகவே கருதப்படுகிறது.
