ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வா?.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 08, 2019 09:27 PM

ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

IPL 2019: India should rest Kohli from IPL for world cup Says, Michael

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று  வருகிறது. இதன் முதல் போட்டி மார்ச் 23 -ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் ராயல் சேல்ஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 14 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை அடைந்துள்ளதால், மீதி இருக்கும் 8 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தகுதி சுற்றுக்கு செல்லும் சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,‘இந்திய அணி ஒரு சிறப்பான முடிவை எடுக்குமானால் விராட் கோலிக்கு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும். உலகக் கோப்பை வரயிருப்பதால் அவருக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #ROYALCHALLENGERSBANGALORE #PLAYBOLD