'உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள் தான்'... 'ஸ்டெம்ப்ல பட்டுச்சுப்பு'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 08, 2019 11:47 AM

என்னமோ தெரியவில்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தொடர்ந்து சோகம் துரத்தி கொண்டே இருக்கிறது.இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Ball Hits Stump But Bails Don\'t Come Off video goes viral

நேற்று கொல்கத்தா அணியுடனான போட்டியிலும் இந்த சோகம் ராஜஸ்தான் அணியினை துரத்தியது.நேற்றைய போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில்,அந்த அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் பேட்டிங் செய்யும் போது தவல் குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது.

இதனால் அவுட் என குல்கர்னி துள்ளி குதித்தார்.ஆனால் அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கிய போது ஸ்டெம்ப் லைட்டும் எரிந்தது.ஆனால் ஸ்டெம்பின் பெயில்ஸ் கீழே விழாமல் பந்தானது அப்படியே பவுண்டரிக்கு சென்றது.

இதனால் மகிழ்ச்சியில் இருந்த குல்கர்னியின் முகம் சோகத்தால் வாடியது.இதனை அம்பயர் விதிகளின் படி அவுட் இல்லை என்று கூற, லின் பேட்டிங்கை தொடர்ந்தார்.இதுபோன்ற சம்பவங்கள் ஐபியலில் புதிது இல்லை என்றாலும்,நேற்று நடந்த இந்த சம்பவத்தினை 'ஃபெவிகால் வைத்த பெயில்ஸ்கள்' என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

இதனிடையே இந்த அவுடிலிருந்து தப்பிய லின் 50 ரன்களை குவித்தார். இதன் மூலம் 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.