‘செவனேன்னு போன என்ன புடிச்சி லாக் பண்ணி’..‘ஏன் உனக்கு இந்த வேல’.. வாட்சனை வம்பிழுத்த ரஷித் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 24, 2019 04:29 PM

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது வாட்சனை வம்பிழுக்கும் வகையில் ரஷித் கான் செய்த செயலை இணையத்தில் நெட்டிசன்கள் மீம்களாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

IPL 2019: Rashid Khan tries to intimidate Watson turns into viral meme

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டி நேற்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 83 ரன்களிம் எடுத்து இருந்தனர்.

இதனை அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், வாட்சன் 96 ரன்களும், ரெய்னா 38 ரன்களும் அடித்து அதிரடி காட்டினர். போட்டியின் நடுவே ரஷித் கான் வீசிய பந்தை வாட்சன் பவுண்டரிக்கு  விளாசினார். அப்போது ரஷித் கான் வாட்சனை வம்பிழுக்கு விதமாக உரசி சென்றார். இதனை அடுத்து வாட்சன் சிக்ஸ், பவுண்டரி என விளாசி தள்ளினார்.

இதில் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். இதனை அடுத்து ரஷித் கான், வாட்சனை முறைத்து செல்லும் வீடியோவை பலரும் இணையத்தில் மீம்ஸ்கள் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.

Tags : #IPL #IPL2019 #WATSON #RASHIDKHAN #WHISTLEPODU #YELLOVE #CSKVSRH