அட இங்க தான் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கான பிரம்மாண்ட துவக்க விழாவா? இப்போது இருந்தே களைக்கட்டும் நகரம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 04, 2019 10:47 PM
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30 துவங்கி ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. இதில், மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. மேலும், கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரம்மாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த இதில் துவக்க விழாவில் ஏகப்பட்ட பேர் பங்கேற்க திட்டமிட்டிருந்தாலும், சுமார் 4000 பேருக்கு தான் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், இதுகுறித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில், ‘பக்கிங்ஹாம் அரண்மனையை பின்புறத்தில், உள்ள மால் சாலையில் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான பிரமாண்ட துவக்க விழா நடக்கவுள்ளது. முதல் போட்டிக்கு முன்பாக நிச்சயமாக இப்படி ஒரு துவக்க விழா என்பது அவசியம். ’ என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.