VIDEO: பீல்டிங் 'பண்ண' சொன்னா.. சும்மா கெடந்த பந்த 'பவுண்டரிக்கு' உதைச்சு.. விடுறியே தம்பி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 30, 2019 11:53 PM
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து, கிரிக்கெட் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து மிரட்டினார். ரன்கள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணி, பீல்டிங்கிலும் செமையாக சொதப்பியது. குறிப்பாக இளம்வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பவுண்டரி நோக்கி வந்த பந்து எந்த பக்கம் சென்றது என தெரியாமல் திணறி, பந்தை பவுண்டரிக்கு விட்டார்.
😳🙈#AUSvPAK pic.twitter.com/FKkW2VDDFY
— cricket.com.au (@cricketcomau) November 29, 2019
மீண்டும் ஒருமுறை பந்து பவுண்டரி லைனை நோக்கி செல்ல அதை பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பந்தை காலால் பவுண்டரிக்கு உதைத்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் திகைத்து, பின்னர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர். நேரடி வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஷஹீன் ஷா அப்ரிடி வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார் என விளாசித் தள்ளி விட்டார்.
மொத்தத்தில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளால் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது.
