டீம் ஜெயிச்சிருச்சு.. ஆனாலும் இது 'ரொம்ப' தப்பு.. தன்னையே 'தண்டித்துக்கொண்ட' நம்பர் 1 பேட்ஸ்மேன்.. ஏன் இப்டி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 28, 2019 01:05 PM
டெஸ்ட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்ட விவரம் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் யாசிர் ஷா பந்தில் ஸ்மித் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்மித் ஆட்டமிழந்தாலும் மற்றவர்கள் ரன்களை குவித்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் ஸ்மித் தன்னையே தண்டித்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,''குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தால் என்னை நானே தண்டித்து கொள்வேன். ஜிம்மிற்கு சென்று வொர்க்அவுட் செய்வது இப்படி ஏதாவது ஒரு விதத்தில் எனக்கு தண்டனை அளிப்பேன்.
அதேபோல நிறைய ரன்கள் எடுத்தால், சதம் அடித்தால் எனக்கு நானே சாக்லேட் பரிசாக அளித்து கொள்வேன்,'' என கூறியிருக்கிறார். 4 ரன்களில் ஆட்டமிழந்த அன்று பேருந்தில் செல்லாமல், மைதானத்தில் இருந்து தங்கியிருந்த ஹோட்டல் வரையிலான 3 கிலோமீட்டர் தூரத்தை ஸ்மித் ஓடியே கடந்திருக்கிறார். யாசிர் ஷா 11 இன்னிங்க்ஸ்களில் 7 முறை ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
