மொத்தம் 55 ரன்.. அதுல 7 சிக்ஸ்.. நம்ம 'சிஎஸ்கே' பவுலரா.. இப்டி வெறித்தனமா அடிச்சாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 27, 2019 11:54 PM

சென்னை அணியில் உள்ள ஒவ்வொரு பிளேயரும் இக்கட்டான சூழ்நிலையில் அணிக்காக பேட்டிங் செய்து விளையாடி இருக்கின்றனர். சில நேரங்களில் பவுலர்களால் மேட்சில் வெற்றி கிடைத்ததும் உண்டு. ஆனால் உண்மையிலேயே சிஎஸ்கே பவுலர் வெறித்தனமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்து இருக்கிறார்.

Deepak Chahar scored 55 runs in Syed Mushtag Ali Trophy

சையது முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தீபக் சாஹர் 42 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறார். தீபக்கின் இந்த பங்களிப்பால் டெல்லி அணியை ராஜஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி தெரிவித்து தீபக்கை வாழ்த்தி இருக்கிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தீபக்கின் பேட்டிங் திறமை குறித்து கூறியதை நினைவு கூர்ந்து தீபக்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை டீமுக்கு இன்னொரு ஓபனிங் பேட்ஸ்மேன் கெடைச்சுட்டாரு!