VIDEO: 7 வருசம் கழிச்சு மனுசன் இப்போதான் ‘அதை’ டிரை பண்ணாரு.. ‘முதல் பாலே இப்டி ஆகிடுச்சே’.. மும்பை அணிக்கு வந்த சிக்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஓவர் வீச சென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா கால் பிசகி கீழே விழுந்தார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 5-வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 43 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ரசல் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென பந்து வீச வந்தார். போட்டியின் 14-வது ஓவரை வீச ஓடி வந்த அவர், சட்டென கால் பிசகி விழுந்தார். இதனால் வலியில் துடித்த ரோஹித் ஷர்மாவுக்கு மைதானத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. சில நிமிட ஓய்வுக்குப் பின் ரோஹித் ஷர்மா பவுலிங் செய்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ரோஹித் ஷர்மா விட்டுக் கொடுத்தார்.
நேற்றைய ஆட்டத்தின் 15 ஓவர்கள் வரை மும்பை அணி தோல்வி அடையும் நிலையிலேயே இருந்தது. பும்ரா, போல்ட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களில் ஓவர்களில் ஆரம்பத்தில் ரன்கள் அதிகமாக சென்றுகொண்டே இருந்தது. சுழற்பந்து வீச்சில் ராகுல் சாகர் மட்டுமே அவ்வப்போது விக்கெட் எடுத்து ஆறுதல் அளித்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளாரான குர்ணல் பாண்டாவும் ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்தினார்.
— Aditya Das (@lodulalit001) April 13, 2021
இதனை அடுத்து மும்பை அணியில் வேறு சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததால், ரோஹித் ஷர்மா பவுலிங் செய்தார். காலில் அடிபட்ட பின்னரும் கூட சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா 1 ஓவர் வீசினார். அதன்பின்னர் 7 ஆண்டுகள் கழித்து, தற்போது கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் ஓவர் வீசிய குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு காலில் காயமடைந்துள்ளதால், அடுத்த சில போட்டிகளில் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
6th May 2014 - Rohit Sharma Bowled Just 1 Over (0/6) vs RCB in IPL
AFTER 2534 DAYS,
TODAY - Rohit Sharma Bowled 1 Over (0/9) vs KKR in IPL #MI #OneFamily #KKRvMI
— Rajesh Khilare (@Cricrajeshpk) April 13, 2021