"'பவுலிங்' மட்டுமில்ல... இந்த விஷயத்துலயும் நாங்க 'கில்லி' தான்..." 'நடராஜன்' பிடித்த கேட்ச் !!... கைதட்டி ஆரவாரம் செய்த 'வீரர்கள்'... வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணிகளும் தீவிரமாகி தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக விலகியுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அடுத்த போட்டியில் நடராஜன் அணியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், இந்திய அணி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த போது நடராஜன் பிடித்த கேட்ச் ஒன்றின் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சற்று கடினமான கேட்ச் ஒன்றை மிக அற்புதமாக நடராஜன் ஓடிச் சென்று பிடித்த நிலையில், உடனிருந்த சக வீரர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
@Natarajan_91 has been grabbing his chances very well on this tour. 😁🙌 #TeamIndia #AUSvIND pic.twitter.com/sThqgZZq1k
— BCCI (@BCCI) January 3, 2021
இந்த வீடியோவை பகிர்ந்த பிசிசிஐ, 'நடராஜன் இந்த சுற்றுப்பயணத்தில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிக கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்கிறார்' என குறிப்பிட்டுள்ளது. டி 20 காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தான் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அதே போல, ஒரு நாள் போட்டி தொடரிலும் அவருக்கு ஒரே ஒரு போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனக்கான முத்திரையையும் பாதிக்க நடராஜன் தவறவில்லை. அதைக் குறிப்பிட்டு தான் பிசிசிஐ அப்படி பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே, பயிற்சியில் பல விதமான பந்து வீச்சுகளையும், அதிக விக்கெட்டுகளையும் நடராஜன் வீழ்த்தி அசத்தி வரும் நிலையில், தற்போது ஃபீல்டிங் பயிற்சியிலும் தீவிரமாக அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.