"என்னங்க இத போய் 'ட்வீட்' பண்ணிருக்கீங்க??..." 'ஆஸ்திரேலிய' வீரரின் 'உள்ளாடை' படத்தை பகிர்ந்த 'ஐசிசி'!!... அதுல இருக்குற 'IMAGE' தான் பிரச்சன... சர்ச்சை 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jan 01, 2021 07:19 PM

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதியன்று சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

icc share picture of nathan lyon wear underwear gets trolled

இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ள நிலையில் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. இதனிடையே, தொடரை வெல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன், தனது பேண்டின் மீது அணிந்திருந்த உள்ளாடையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. 

 

அந்த உள்ளாடையில் நாதன் லயன் நடுவரிடம் அவுட் கேட்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் அதனை அதிகம் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் ரசிகர்களிடையே அதிகம் வைரலானாலும் மறுபக்கம் இது மிகப்பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்று நீங்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தி மற்றவர்களை சிரிக்க வைக்கும் நேரத்தில், உங்களது பந்து வீச்சில் இன்னும் அதிக கவனத்தை மேற்கொண்டு விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிகப் பெரிய அளவில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Icc share picture of nathan lyon wear underwear gets trolled | Sports News.