"அவளை இந்த நிலைமைல விட்டுட்டு".. இந்திய கணவர்.. உக்ரேனிய மனைவி.. போர் நடுவே ஒரு உருக்கமான காதல் கதை..!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் ஒன்றினை உக்ரைன் நாடு தற்போது சந்தித்து வருகிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி போர் அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அன்று துவங்கி தினமும் துப்பாக்கி சத்தமும், குண்டுகளின் முழக்கமும், மரண ஓலங்களும் உக்ரைனில் வாடிக்கையாகிவிட்டன.

இந்நிலையில், உக்ரைனில் வசித்துவரும் தங்களது நாட்டினரை உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. தூதர்களை ஏற்கனவே வெற்றியேற்றிய நாடுகள், மக்களை மீட்க சிறப்பு விமான சேவைகளை பயன்படுத்திவருகின்றன. இந்தியாவும் ஆப்பரேஷன் கங்கா என்னும் வான்வெளி மீட்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
உக்ரைனில் கல்வி பயின்றுவந்த மாணவர்கள், இந்தியர்கள் ஆகியோரை உக்ரைன் அண்டை நாடுகளான போலந்து, ரோமானியா, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளின் வழியாக இந்திய அரசு மீட்டு வருகிறது. இதனிடையே தனது நிறைமாத கர்ப்பிணியை விட்டுவிட்டு தன்னால் இந்தியா வர முடியாது என மறுத்து இருக்கிறார் இந்தியர் ஒருவர்.
காதல்
இந்த இந்தியரின் மனைவி உக்ரைனை தாயகமாக கொண்டவர். அவர் தற்போது 8 மாத கர்ப்பவதியாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்," இந்திய குடிமகனாகிய எனக்கு இந்தியாவிற்குள் நுழைய எளிதில் அனுமதி கிடைக்கும். ஆனால், எனது மனைவிக்கு அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். போர் உக்கிரமடைந்து இருக்கும் இந்த நாட்டில் எனது மனைவியை விட்டுவிட்டு என்னால் தாயகம் திரும்ப முடியாது. நாங்கள் போலந்திற்குச் செல்வோம். நாங்கள் தற்போது லிவிவில் ஒரு நண்பரின் இடத்தில் இருக்கிறோம்," என்றார்.
தனது காதல் மனைவியை விட்டுவிட்டு தம்மால் இந்தியா திரும்ப இயலாது என இந்தியர் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மீட்பு நடவடிக்கை
உக்ரைனில் போர் துவங்கிய இரண்டு நாளில் அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி, ஆப்பரேஷன் கங்கா திட்டத்தை அறிவித்தது இந்திய அரசு. இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்தியா 76 விமானங்களில் 15,920 க்கும் மேற்பட்ட மாணவர்களை வெற்றிகரமாக உக்ரைனில் இருந்து வெளியேற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 6,680 பேர் ருமேனியாவிலிருந்து 31 விமானங்களிலும், 5,300 பேர் ஹங்கேரியிலிருந்து 26 விமானங்களிலும், 2,822 பேர் போலந்திலிருந்து 13 விமானங்களிலும், 1,118 பேர் ஸ்லோவாக்கியாவிலிருந்து ஆறு விமானங்களிலும் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்..

மற்ற செய்திகள்
