‘உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து..’ ‘ஆட்டத்தின் ஹைலைட் நிமிடங்கள்..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 31, 2019 12:31 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

worldcup england vs south africa highlights england win by 104 runs

லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. உலகக்கோப்பையின் முதல் ஓவரை வீசிய தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்ட்டோ எதிர் கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகினார். அவர் டக் அவுட் ஆக,  ராய் (54), ரூட் (51), மோர்கன் (57) மற்றும் ஸ்டோக்ஸ் (89) ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 எடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் நெகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

312 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், ஆம்லா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஆர்ச்சர் பந்து வீச்சில் அடிபட்டு ஆம்லா வெளியேற, பின்னர் வந்த மார்க்ரம், டு பிளிசிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த டி காக், துசென் ஜோடியில் டி காக் (68), துசென் (50) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டுமினி (8), பெலுக்வயோ (24) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் மற்றவர்களும் ஆட்டமிழந்தனர். 39.5 ஓவரில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்கா. ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், பிளங்கட், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags : #ICCWORLDCUP2019 #ENGVSSA