8 டீம்ல.. 'அதிக' சம்பளம் வாங்குறது இவங்க தான்.. 'மொத' இடம் யாருக்குனு பாருங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 21, 2019 07:36 PM

இந்தியா முழுவதும் மாநிலங்களின் முக்கிய நகரங்களை அடிப்படையாக கொண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 8 ஐபிஎல் அணிகள் உள்ளன. திறமைமிக்க வீரர்களை உலகிற்கு அறிமுகம் செய்யவும், அவர்களுக்கு ஒரு களமாகவும் இருக்கும் பொருட்டு ஐபிஎல் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.

IPL 2020: Highest paid player from each of the 8 teams

ஆரம்ப நாட்களில் சாதாரணமாக இருந்த போட்டிகள் நாளடைவில் ரசிகர்களைக் கவர தற்போது பெரும் பணம் புழங்கும் போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டன், முக்கிய வீரர்கள் ஒவ்வொரு அணியையும் தற்போது வழிநடத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு அணிக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருந்து வீரர்களை விடுவித்தும், மற்ற டீம்களுக்கு விற்பனை செய்தும் பரபரப்பை ஏற்படுத்தின. டிசம்பர் 19-ம் தேதி 2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அணிகள் அனைத்தும் யாரை எடுக்கலாம்? எவ்வளவு பணம் செலவு செய்யலாம்? என்று மனக்கணக்கு போட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஒவ்வொரு அணியிலும் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் எந்த டீம் வீரர் அதிக சம்பளம் வாங்குகிறார்? கேப்டனாக ஒவ்வொரு வீரரும் பெறும் சம்பளம் குறித்து இங்கே பார்க்கலாம். இங்கே உள்ள வீரர்கள் அனைவரும் தங்களது அணியால் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. விராட் கோலி

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். பெங்களூர் அணியின் கேப்டனாகவும், முன்னணி வீரராகவும் திகழும் விராட் சம்பளமாக 17 கோடி ரூபாய் பெறுகிறார். இவருக்கு அடுத்து பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ் ரூபாய் 11 கோடியினை சம்பளமாக பெறுகிறார்.

2. மகேந்திர சிங் டோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான டோனி சென்னை அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். சம்பளமாக டோனி பெறும் தொகை 15 கோடி. இதுவரை டோனி மட்டுமே சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ரோஹித் சர்மா

இந்திய அணியின் துணை கேப்டனும் இரட்டை சதம் அடிப்பதில் சிறந்தவருமான ரோஹித் மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இவருக்கு சம்பளமாக ரூபாய் 15 கோடி வழங்கப்பட்டு வருகிறது.

4. ரிஷப் பண்ட்

அடுத்த டோனியாக இவரை வளர்த்தெடுக்க இந்திய அணி படாத பாடுபட்டு வருகிறது. அதிரடி இளம்வீரராக அறியப்படும் ரிஷப் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். சம்பளமாக ரூபாய் 15 கோடி வாங்குகிறார்.

5. டேவிட் வார்னர்

ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான வார்னர் சம்பளமாக ரூபாய் 12.5 கோடியினை பெறுகிறார். தடைக்குப்பின்னும் ஹைதராபாத் அணி அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6. பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு சம்பளமாக ரூபாய் 12. 5 கோடியினை அந்த அணி அளித்து வருகிறது.

7. சுனில் நரைன்

வெஸ்ட் இன்டீஸை சேர்ந்த சுனில் நரைன் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கு அந்த அணி 7.40 கோடியை சம்பளமாக அளித்து வருகிறது. ஆனால் சுனில் பெறும் 12.5 கோடிகள் ஆகும்.

8. கே.எல்.ராகுல்

இந்திய அணியின் இளம்வீரர்களில் ஒருவரான ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். அந்த அணியில் அதிகபட்ச சம்பளம் பெறும் வீரர் இவர்தான். ஆமாம் 11 கோடியை ராகுல் சம்பளமாக பெறுகிறார்.