'தோனிக்கு' அப்புறம்.. சென்னை டீமை.. 'கேப்டனா' வழிநடத்த போறது... 'இவங்கள்ல' ஒருத்தர் தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 25, 2019 09:10 PM

தோனிக்கு அப்புறம் சென்னை அணி கேப்டன் என்று எழுதும்போதே கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் எப்படியும் ஒருநாள் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார். அப்படி அவர் ஓய்வை அறிவிக்கும்போது அடுத்த கேப்டன்  யார்? என்ற எண்ணம் கண்டிப்பாக அனைவர் மத்தியிலும் எழும்.

Who Can Lead Chennai Super Kings After Dhoni\'s retiremnet

சென்னை அணியும் கண்டிப்பாக கேப்டன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதற்கு முன்னர் அந்த பதவிக்கு பொருத்தமான சென்னை அணி வீரர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம். தற்போது இந்த பட்டியலில் மூன்று வீரர்கள் இருக்கின்றனர்.

சுரேஷ் ரெய்னா

இதில் முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். தோனியை விட அதிக மேட்சுகள்(188) விளையாடி இருக்கும் ரெய்னா 5399 ரன்கள் சென்னை அணிக்காக குவித்து இருக்கிறார். தற்போது அணியின் துணை கேப்டனாகவும் இருப்பதால் ரெய்னாவுக்கு இந்த போட்டியில் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஜடேஜா

2012-, ம் ஆண்டு ஜடேஜாவை சுமார் 9.8 கோடிகள் கொடுத்து சென்னை அணி எடுத்தது. உலகின் நம்பர் 1 பீல்டரான ஜடேஜா சென்னை அணிக்காக சுமார் 7 வருடங்களாக ஆடி வருகிறார். 170 மேட்சுகள் ஆடி 1927 ரன்களும், 108 விக்கெட்டுகளும் எடுத்துள்ள ஜடேஜாவும் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

தீபக் சாஹர்

ஐபிஎல் அணிகளை இளம்வீரர்கள் வழிநடத்துவது தான் லேட்டஸ்ட் பேஷன். அந்த வகையில் இந்திய அணியின் ஹாட்ரிக் பவுலர் தீபக் சாஹருக்கும் அந்த வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 2010 முதல் சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் புனே அணியிலும் தோனியின் கீழ் ஆடி இருக்கிறார். மேலும் ராஜஸ்தான் அணிக்காகவும் அவர் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் அணியை பவுலர்கள் வழிநடத்துவது ஒன்றும் புதிதல்ல என்பதால் இந்த 27 வயது பவுலர் தோனிக்குப்பின் அணியை வழிநடத்தினாலும் ஆச்சரியமில்லை.